Tuesday, August 31, 2010

விஜய்யின் ராஸ்கல்! 3 இடியட்சின் தமிழ் டைட்டில்?

நவம்பர் முதல் வாரத்தில் ஷ§ட்டிங் போகலாம் என்று தீர்மானித்திருக்கிறார்களாம் த்ரி இடியட்ஸ் படத்தின் ரீமேக்கான தமிழ் படத்திற்கு. இதில் விஜய், தமன்னா, ஜோடியாக நடிக்கிறார்கள் என்பதும், ஷங்கர் இயக்குகிறார் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அறியப்படாத ஒரு விஷயம்தான் இப்போது சொல்லப் போவது

இப்படத்திற்கு 'ராஸ்கல்' என்று பெயர் வைத்திருக்கிறாராம் ஷங்கர். (இது தமிழ் பெயர் இல்லையே என்று மற்றவர்கள் விமர்சிக்கும் போது மாற்றிக் கொள்வாரோ என்னவோ) இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிற அளவுக்கு தனது பட ரிலீஸ்களை பிளான் பண்ணியிருக்கிறார் அவர். வருகிற தீபாவளிக்கு காவலன் திரைக்கு வருகிறான். வேலாயுதம் பொங்கலுக்கு

ரசிகர்களின் சம்மர் விருந்துதான் இந்த ராஸ்கல். இதற்கிடையில் சீமானின் பகலவன் படத்திலும் நடிக்க முழு வேகத்துடன் இருக்கிறார் விஜய். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான் என்பதை கடந்த வாரமே நாம் எழுதியிருந்தோம்.இதை சில தினங்களுக்கு முன்பு நடந்த தியாகி முத்துகுமார் பற்றிய ஆவணப்பட விழாவில் உறுதி படுத்தியிருந்தார் பாடலாசிரியர் அறிவுமதி.

விஜய்யின் இந்த மின் வேகப் பாய்ச்சலுக்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழ்சினிமாவில் ரஜினி கமல் தவிர்த்து தான் மட்டுமே டாப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் எண்ணம். கடந்த சில படங்களின் தோல்வி அவரது ரேங்க்கை சற்று கீழே இழுத்திருக்கிறது. அதை சமன்படுத்த வேண்டும் என்பதற்காகதான் இந்த பாய்ச்சல்!

பகலவன் படம் டிராப் இல்லை தாணு-விஜய்-சீமான் உறுதி!

எழுத நேரமில்லாமல் பிசியாகவே இருப்பவர்களுக்கு சிறைக்கூடம் வசதிதான்! சிறைக்கு போன சீமான் அங்கே அமைதியாக செய்து முடித்த முக்கியமான வேலை ஒன்று பகலவன் ஸ்கிரிப்டை பக்காவாக முடித்ததுதான். கடந்த பல மாதங்களாகவே ஒரு குழுவோடு இந்த கதையை மெருகேற்றிக் கொண்டிருந்தார் சீமான். கதை முழுமையடையும்போதுதான் இந்த கைதும் சிறையும்!
உள்ளே போன சீமான் இந்த ஸ்கிரிப்டை முழுமையாக்கிவிட்டாராம் இப்போது. நேற்று சிறைச்சாலைக்கு சென்றிருந்த தயாரிப்பாளர் தாணு இந்த படம் பற்றிய அடுத்தடுத்த முன்னேற்றங்கள் குறித்து சீமானிடம் பகிர்ந்து கொண்டாராம்.
நான் இந்த படத்தில் நடிக்கிற விஷயத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் ஆக வேண்டியதை பதற்றமில்லாமல் பாருங்கள் என்று தாணுவிடமும், சிறைக்குள்ளிருக்கும் சீமானிடமும் உறுதியாக கூறியிருக்கிறாராம் விஜய். தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் காவலன், வேலாயுதம் படங்களுக்கு பிறகு சீமான் இயக்கப் போகும் பகலவன்தான் விஜய் நடிக்க போகும் படம் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

இப்படி நடந்து வாங்க... அப்படி லுக் கொடுங்க... விஜய்யின் டைரக்ஷன்!

ஜாஸ் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரம் பார்த்தவர்கள் இரண்டு விஷயங்களுக்காக அசந்து போயிருப்பார்கள். ஒன்று விஜய். இன்னொன்று அந்த சில நிமிட விளம்பரத்தில் அற்புதமான ஒரு கதையை சொன்ன விதம்!
ஒரு பள்ளிக்கூடத்திற்கு முன்பு தனது படகு காரில் வந்திறங்குவார் விஜய். அப்போது அந்த பள்ளியில் படித்த சிறுவயது நினைவுகள் அவருக்குள் நிழலாடும். தான் செய்த ஒரு தவறுக்காக ப்யூன் ஒருவரை தலைமை ஆசிரியர் பிரம்பால் அடிப்பார். அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வரும் சிறுவயது விஜய், 'அந்த தப்பை அவரு செய்யல. நான்தான் செஞ்சேன்' என்பார். அதோடு நினைவுகள் மறைய தனது கையால் அந்த பள்ளியில் மணியை அடிப்பார் விஜய். அப்போது தனது செயலுக்காக அடிவாங்கிய அந்த பியூன் வயதான தோற்றத்தில் து£ரத்திலிருந்து வருவார். விஜய்யை கட்டியணைத்துக் கொள்ளும் அவர் கண்கலங்க, ஒரு பரிசுப் பொருளை அவர் கையில் திணித்துவிட்டு சின்ன புன்னகையுடன் காரில் ஏறி சென்றுவிடுவார்.
பிரமிப்பு விலகாத ப்யூன் தனது கையை திறந்து அந்த பரிசுப்பொருளை கவனிக்கிறார். ஜாஸ் ஆலுக்காசின் விலை உயர்ந்த வைர மோதிரம்! இப்படி போகிறது அந்த விளம்பரம்.
இதில் அந்த ப்யூனாக நடித்திருப்பவர் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியிருக்கும் காசி. இந்த விளம்பர படத்தின் இயக்குனர் மனோஜ் பிள்ளையுடன் லொகேஷன் பார்க்க போயிருந்தாராம். பல இடங்களை அவருக்கு காட்டியவர் கடைசியாக ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் வெஸ்ட்லி பள்ளியை காண்பித்திருக்கிறார். அப்போது இந்த கண்ணாடியை போட்டுகிட்டு நடந்து வாங்க என்றாராம் மனோஜ். அப்படியே நடந்து வந்த காசியிடம் நீங்கதான் இந்த கேரக்டர்ல நடிக்கிறீங்க என்று கூற இன்ப அதிர்ச்சி காசிக்கு.
இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு திரையுலகத்தினர் பலரும் பெரிய கேரக்டர்களில் நடிக்க அழைக்கிறார்களாம். 'என் முதல் படமே விஜய்யுடன் நடிச்சது பெரிய மகிழ்ச்சி என்று புல்லரிக்கிறார் காசி. மொத்தம் இரண்டு நாட்கள் நடந்த அந்த படப்பிடிப்பில் விஜய்யே முன் வந்து 'காசியண்ணே, இப்படி நடந்து வாங்க. அப்படி லுக் கொடுங்க' என்று சொல்லிக் கொடுத்ததுதான் அதைவிட பெரிய மகிழ்ச்சி' என்கிறார் காசி.

ஏ. ஆர் ரஹ்மான், ஜாக்கிஷான், மோகன்லால் கூட்டணி


ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் படம்தான் நாயர்ஷான். இப்படத்தை ஆல்பர்ட் இயக்குகிறார். கூடுதல் பலமாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 150 கோடி பக்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் ஒரு இந்திய&ஜப்பான் வரலாற்றுப் படமாக அமையும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், இளைஞர்களின் தலைவனாகவும், துடிப்பான தேசப்பற்று மிக்க இந்தியக் குடிமகனுமான கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் மோகன்லால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அய்யப்பன் பிள்ளை நாயர். பள்ளி படிப்புகளை எல்லாம் தனது சொந்த ஊரான கேரளாவிலே முடிக்கிறார், பள்ளிப் பருவத்தின் போதே இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் அரசின் காலணியாக்கத்தை எதிர்த்து போராடுகிறார்.

ஒரு கட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானுக்கு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு ஜப்பானிய மக்களுக்கு ஆதரவாக போராட்டம்(பிரிட்டிஷ் எதிராக) நடத்துகிறார். ஜாக்கி ஜான் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.ஜாக்கிஜான், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களின் கூட்டணியால் ரசிகர்களிடையே இப்படம் மாபெறும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விறுவிறு வேலாயுதம்-வெளிச்சப்படுத்தும் ராஜா!

தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ராஜா இயக்கிய 5 படங்களும் தமிழில் சூப்பர் ஹிட். இதுவரை ரீமேக் செய்வதில் ராஜா ராஜாதான் என நிரூபித்து வந்தார். இப்போது ராஜாவின் அடுத்த ரீமேக் விஜய் நடிக்கும் வேலாயுதம். வேலாயுதம் தெலுங்கு படமான “ஆசாத்” படத்தின் ரீமேக்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜூன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்து தெலுங்கில் ஹிட்டான படம் “ஆசாத்”.
விஜய்யின் முந்தையப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக “வேலாயுதம்” அமையும் என்று திரைவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வேலாயுதம் படத்தின் சிறப்பான சில விஷயங்களை வெளிச்சப்படுத்தினார் இயக்குனர் ராஜா.
விஜய்-ஜெனிலியா நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது வேலாயுதம். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவின் கோல்கொண்டாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கான இடத்தினையும் ஆந்திராவிலேயே தேடிவருகிறார்கள். இந்தப் படத்தின் தழுவலான வேலாயுதம் பற்றிய பரபரப்பான கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதிலளித்தார் ராஜா.
‘ஆசாத்’ விஜய்க்கான படமாக உருவானது எப்படி?
2 வருசத்துக்கு முன்பே ஆசாத் படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். அதற்கு அவர், “கதை ஓ.கே. ஆனால் இப்போ உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி இருந்தா படம் பண்ணலாம்” என்றார். ஆசாத் கதை மட்டுமே எடுத்துக் கொண்டு விஜய்க்கு ஏற்றாற் போல் வேலாயுதம் திரைக்கதையை உருவாக்கினேன். இதை ரீமேக் என்றும் சொல்ல முடியாது. ரொம்ப வருஷத்துக்கு முன்பு வெளிவந்த படம் என்பதால் அதை அப்படியே ரிமேக் செய்ய முடியாது. இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்க 8 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இதுவரை வந்த விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும்.
விஜய்யின் முந்தைய 5 படங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற நிலையில், தற்போது இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். அந்த வகையில் நிச்சயம் வேலாயுதம் ஹிட் படமா அமையும் என்ற நம்பிக்கை இருக்கு. சமீபகால விஜய் படங்களில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு பெரிய மாஸ்சோடு வருவார். ஆனால் இதில் அப்படி இல்லை. இயல்பான கிராமத்து இளைஞனாக முதல் பாதியில் வருவார். இரண்டாம் பாதியில் அவர்தான் ஹீரோ என்று அவருக்கே தெரியாது. அவர் எதார்த்தமாக செய்யும் எல்லா விஷயங்களுமே அவரை ஹீரோவாக்கிவிடும். அதே நேரம், நகரத்தில் நடக்கும் அநியாயங்களை அழிக்கும் அவதாரமாக ஒரு மாஸ் ஹீரோவாகவும் கலக்குவார். பஞ்ச் வசனங்கள் எல்லாம் இதில் இல்லை. பாடல்களில் கூட விஜய்யின் ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரியான புதுமைகளை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
படத்தின் நாயகிகளை பற்றி ?
இந்தப் படத்தில் ஜெனிலியா, எப்போதும் ஒரு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிச்சுட்டு வராங்க. ஆசாத் படத்தில் சௌந்தர்யா அருமையாக நடிச்சிருப்பாங்க. அதே அளவிற்கு திறமையான நடிப்பை ஜெனிலியாவும் வெளிப்படுத்துராங்க. படத்தின் பல பிளஸ்களில் விஜய், ஜெனிலியா இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெசல் பிளஸ். தெலுங்கில் ஷில்பா ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் புதுமுகம் ஹன்சிகா நடிக்கிறார்.  விஜய்க்கு தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார், அவருக்கும் படத்தில் நல்ல கதாபாத்திரம்.

3 இடியட்ஸ்க்கு பெயர் சூட்டியாச்சு…

ஹி‌ந்‌தி‌யி‌ல்‌ மி‌கப்‌பெ‌ரி‌ய வெ‌ற்‌றி‌யை‌ பெ‌ற்‌ற படம்‌ 3இடி‌யெ‌ட்‌ஸ்‌. இந்‌த படத்‌தை‌ தமி‌ழி‌ல்‌ ரீ‌மே‌க்‌ செ‌ய்‌ய உள்‌ளனர்‌. முதலி‌ல்‌ இந்‌த படத்‌தி‌ல்‌ வி‌ஜய்‌, மா‌தவன்‌, சி‌ம்‌பு‌ நடி‌ப்‌பதா‌க கூறப்‌பட்‌டது. அதற்‌கு அடுத்‌து சி‌ம்‌பு‌க்‌கு பதி‌ல்‌ ஜீ‌வா‌ நடி‌ப்‌பதா‌க கூறப்‌பட்‌டது. இப்‌போ‌து அதெ‌ல்‌லா‌ம்‌ இல்‌லை‌.
வி‌ஜய்‌, தமன்‌னா‌ நடி‌க்‌க, நவம்‌பர்‌ மா‌தம்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ கி‌ளம்‌ப இருக்‌கி‌ன்‌றனரா‌ம்‌ இந்‌த குழுவி‌னர்‌. இந்‌த படத்‌தி‌ற்‌கு ரா‌ஸ்‌கல்‌ என பெ‌யர்‌  வை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ரா‌ம்‌ இயக்‌குநர்‌ ஷங்‌கர்‌.
இதற்‌கு இடை‌யி‌ல்‌ வி‌ஜய்‌‌ நடி‌க்‌கும்‌ கா‌வலன்‌ படத்‌தை‌ தீ‌பா‌வளி‌க்‌கு ரி‌லீ‌ஸ்‌ செ‌ய்‌யஉள்‌ளனர்‌. அதற்‌கு அடுத்‌து வே‌லா‌யு‌தம்‌ படத்‌தை‌ பொ‌ங்‌கலுக்‌கு வெ‌ளி‌யி‌ட முடி‌வு‌ செ‌ய்‌தி‌ருக்‌கி‌ன்‌றரா‌ர்‌களா‌ம்‌.
ஏற்‌கனவே‌ ஜெ‌யம்‌ ரவி‌ நடி‌த்‌த தா‌ஸ்‌ படத்‌தி‌ற்‌கு ரா‌ஸ்‌கல்‌ என பெ‌யர்‌ வை‌த்‌து, பி‌றகு மா‌ற்‌றி‌யது குறி‌ப்‌பி‌டதக்‌கது.