Tuesday, September 28, 2010

அசத்திய விஜய் !!!!!!!!பெங்களூரில் பல்ப் வாங்கிய சூர்யா???????????


மறைந்த கன்னட புரட்சி தலைவர் ராஜ்குமாருக்கு முத்து முத்தாய் இரண்டு மகன்கள் இருப்பதும், அவர்கள் கன்னடத்தில் பெரிய நடிகர்களாக வலம் வருவதும் அனைவரும் அறிந்ததே…
இவரில் மூத்தவரான சிவராஜ் 1985 ல் நடிக்க வந்தவர். அவரின் 100-வது படமும், அவரின் 49-வது பிறந்த நாளும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் பெங்களூருவில் கொண்டாடப்பட்டது. இதில் நம்ம விஜய், சூர்யா, மற்றும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், தெலுங்கில் பேசிய சிரஞ்சீவி பெங்களூரு தெலுங்கு ரசிகர்களின் பெரும் கரகோஷத்தைப்பெற்றார்.
அடுத்து வந்த விஜய் தமிழில் பேச தமிழ் ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டு விண்ணைப்பிளந்தனர். ஆனால்… அவரை அடுத்து வந்த தமிழ்நாட்டு  ராக் பெல்லர் சூர்யா ஆங்கிலத்தில் பேச ரசிகர்கள் யாரும் கை அசைக்க கூட இல்லை.  ரொம்பவே நொந்து போனார் சூர்யா.

Monday, September 27, 2010

ஆஸ்கார் தேர்வு-கேவலப்பட்ட தமிழ் சினிமா

நான் ஆஸ்கார் வாங்கி விடுவேன், என்னை உலக சினிமா அங்கீகரிக்க வில்லை, விருது கமிட்டி சரி இல்லை, வட இந்தியர்கள் நம்மை புரக்கணிக்கிறார்கள், என்று வாய் சவடால் மட்டுமே விடும் தமிழ் சினிமாவுக்கு  ஒரு கேவலமான வருடமாக இந்த வருடமும் இருந்திருக்கிறது.
ஆஸ்காருக்கு பரிந்துரைக்க தமிழ் சினிமா தேர்வுக்குழு, மத்திய குழுவுக்கு பரிந்துரைத்த படங்களைப்பார்த்தால் தமிழ் சினிமா பிரகஸ்பதிகளைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.
வருடம் ஏறக்குறைய 130 படங்களைத் திரைக்குக் கொண்டுவருகிறது தமிழ் சினிமா. ஆஸ்காருக்கு அனுப்ப இதிலிருந்து படங்களை 5 படங்கள் தேர்ந்தெடுக்க முடிய வில்லை. திரையில் சமூக சிந்தனை இல்லை, தீர்க்கமான காட்சிகள் இல்லை, தெளிவான கதை இல்லை, புதிய காட்சி அமைப்பு இல்லை. இப்படி இல்லை… இல்லை… இல்லைகளுக்கு மத்தியில் தமிழ் சினிமா வளர்கிறது என்ற வசனம் பேசுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.
இந்த வருடம் ஆஸ்காருக்கு, நம்ம தமிழ் சினிமாவினர் பரிந்துரைத்த தமிழ் படங்களின் பெயர்களை சிரிக்காமல் படிக்க  கேட்டுக்கொள்கிறேன்.
1) ராவணன்
2) மதராஸப்பட்டிணம்
3) விண்ணைத்தாண்டி வருவாயா
4) அங்காடித்தெரு
5) சிங்கம்
என்ன கொடுமை சார்னு நீங்க கேட்கிறது எங்க காதுலயும் விழுது… இந்த படங்களை கொஞ்சம் அலசலாம்…
ராவணன் :
இந்த படம் வந்து தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதாக கிழிக்கப்பட்ட படம்.  தெளிவில்லாத கதையும், மகா மட்டமான வசனமும் இந்த படத்தின் தரத்திற்கு சான்று. இந்த படம் ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும் இந்திய சினிமாவின் அடுத்தகட்டம்னு சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால்… இதை ஆஸ்காருக்கு போய் பரிந்துரைக்கிறோம்னு சொன்னால் ஆஸ்கார் விருது கமிட்டி இந்தியாவை பார்த்து சிரிக்காது???. அதிலும் கார்த்திக்கின் கதாபாத்திரம் படத்தின் எதார்த்தம் என்கிற விஷயத்தை கொன்ற விசயம் அல்லவா அது??.
இந்த படம் பார்த்த நம்ம ஊர் தெருக்கோடி ரசிகனுக்கு கூட 4 கேள்வி… ஏன் இதை இந்த இயக்குனர் இப்படி பண்ணி இருக்கார்னு கேட்பாங்க, அப்படி இருக்கும் போது இந்த படத்தை எப்படி ஆஸ்காருக்கு பரிந்துரைக்க சொல்கிறீர்கள்??.
மனிரத்னம் பெரிய டைரக்டர்  என்பதாலா?? பெரிய  இயக்குனர் நல்ல படம் மட்டும்தான் எடுப்பாரா?? அவரும் ராவணன் எடுப்பார் அப்படின்னு உலகத்துக்கு சொல்லிட்டார்.
மதராஸபட்டிணம் :
நல்ல பொழுதுபோக்கு படமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட படம்.  ஆனால்… இந்த படம் பார்த்த அத்தனை பேருக்குமே டைட்டானிக் ஞாபகம் வந்து போயிருக்கும். இது தமிழ் சினிமாவின் டைட்டானிக் என்றுதான் இந்த படத்தின் இயக்குனரே விளம்பரம் செய்திருக்கிறார். ஆனால் ஒரிஜினல் டைட்டானிக் பார்த்தவங்களுக்கு நீங்க பொம்மை டைட்டானிக் காட்டணும் நினைச்சிருக்கீங்களே??
விண்ணைத்தாண்டி வருவாயா
போன வருடம் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமா காதலர்களுக்கு நல்ல தீனி போட்ட படம். இதே அளவு மொக்கை என்று விமர்சனம் வாங்கிய படம். இந்த படத்தை எப்படி விருதுக்கு பரிந்துரைத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி?? விருதுக்கு உரிய தன்மைகள் இந்த படத்துல பூஜியம்.
விருதுக்கு செல்லும்  படம் எப்படி இருக்கணும்னு ஒரு அடிப்படை அறிவு இல்லாதவன் கூட இந்தப்படத்தைத் தேர்வு செய்ய மாட்டான். ஒரு வேலை சிம்பு பேசும் அந்த 4 எழுத்து கெட்ட வார்த்தை வெள்ளைகாரர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் தான் வருகிறது.
அங்காடித்தெரு
நம்ம ஊர் விருதுகளுக்கு சற்று பொருத்தமான படம் என்றால் இது மட்டுமே. அதுவும் நம்ம ஊர் விருதுகளுக்கு மட்டுமே. உலகளவிய விருதுகளுக்கு பொருத்தமானதாகத் தெரிய வில்லை. காரணம் படத்தின் கதை சொல்லும் பாங்கு, ஒரே கண்ணோட்டம் இந்த படம் முழுவதும் விரவி கிடக்கும். யாதார்த்தம் என்ற பெயரில் யதார்த்தமே இல்லாமல் இருக்கிறது இந்த படம்.
யதார்த்தம் இப்படிப்பட்டதுதான் என்று சொன்ன டைரக்டர் படத்தில் டூயட் வைத்தது எந்த ஊர் யதார்த்தம் என்று தெரியவில்லை. ஆனாலும் உழைக்கும் மக்களின் கஷ்டங்களும் துன்பங்களும் சற்று மிகைப்படுத்தியேனும் சொல்லப்பட்டதற்கு இயக்குனரை கண்டீப்பாக பாராட்டலாம்.
(அ) சிங்கம்
தமிழ் சினிமா படைப்பாளிகளை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. ஒரு மசாலா குப்பையை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க சொன்ன நம்ம சினிமாதுறையை என்ன சொல்வது ? சிங்கம் சூர்யாவின் வெற்றிபடம்தான்; ஹரியின் மசாலா வரிசையில் இதுவும் ஒன்று. இந்த படத்துக்கு ஆஸ்கார் என்றால்?? கில்லிக்கு 10 ஆஸ்கார், தூள் க்கு 10 ஆஸ்கார், தில் க்கு ஒரு 15 ஆஸ்கார், போக்கிரிக்கு ஒரு 10 இவோலவு ஏன் அசல்க்கு கூட ஒரு 5 ஆஸ்கார் கொடுக்கலாம் சிங்கம் படத்துக்கு இந்த படங்கள் 75 மடங்கு சிறந்தது
என்னயா உங்க ரசனை, எதை எதை எங்க வைக்கணும்னு தெரிய வேண்டாமா ?? இதை எல்லாம் விருதுக்கு பரிந்துரைக்கிறதா சொல்லி தமிழ் சினிமாவில் நல்ல படம் எடுக்க ஆளே இல்லன்னு இந்தியா முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்கீங்க??. ஆனது ஆயிடுச்சு இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணா எந்திரன் வந்துடும் அதையும் சேர்த்தே ஆஸ்காருக்கு அனுப்புங்க…
இனிமே சிங்கம் சன்டீவில உலகதொலைக்காட்சியில் முதன் முறையாக வெளி வரும்போது, விளம்பரத்துல ஆஸ்கார் விருது பெற்ற அப்படின்னே சொன்னாலும் சொல்வாங்க… தமிழ் சினிமாவில் தரமான சினிமா குறைந்ததற்கு இதைவிட ஒரு பெரிய சான்று தேவை இல்லை.
தரமான படம் எடுத்து, இது படம் என்று மார்தட்டி ஆஸ்கார் சென்றிருக்கும் பீப்லி லைவ் படம் வெற்றி பெற வாழ்த்துவோம்…
அமீர்கானுக்கு ஒரு சல்யூட்…

Wednesday, September 22, 2010

விஜய்யின் புதிய புராஜெக்ட்-விரைவில் அதிகாரப்பூர்வமாக!

விஜய்யின் காவலன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந்து சீமான் வெளியே வந்தால் பகலவன் வேலைகளும் தொடங்கிவிடும்.
இதன் நடுவில் களவாணி சற்குணம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கோடம்பாக்க பட்சி தெ‌ரிவிக்கிறது.
விஜய்யை வைத்து கில்லி படத்தை தயா‌ரித்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் தயா‌ரிக்கப்போவதும், யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்தான் இந்தப் படத்தை இயக்குகிறவர் என்பதையும் உங்கள் நறுமுகையில் ஏற்கனவே கூறியிருந்தோம்.
தற்போது படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டபடியால் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துவிட்டாராம் தளபதி.
மெகா பட்ஜெட் படமான இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அடுத்த வாரம் எனது புதிய புராஜெக்ட் குறித்து அறிவிக்க இருக்கிறேன் என விக்ரம் கே.குமார் தெ‌ரிவித்துள்ளார்.
யாவரும் நலம் போலவே இதுவும் வித்தியாசமான சப்ஜெக்ட் என்பது கூடுதல் செய்தி.

ajith

ஒரு பக்கம் வரிசையாக தளபதி படவரிசைகளை அடுக்கிட்டு வரார், காவலன், வேலாயுதம், பகலவன், 3 இடியட்ஸ், என்று பட்டாசாய் பொறிய, அஜித் போன வருசம் அசல்னு ஒரு மாடல் ரேம்ப் வாக் போற மாதிரி ஒரு படத்தை கொடுத்துட்டு அடுத்த படத்துக்கு அதோ இதோன்னு இழுத்துட்டு இருக்கார்.
ஆரம்பம் முதல்லே நல்ல படங்களுக்கும், நல்ல டைரக்டர்களுக்கும் இவருக்கும் ஆகறதே இல்ல, நல்ல படம் எடுக்கிறவங்க இவரை வச்சு படம் எடுத்தா அது பப்படம் ஆயிடுது.  இவரை வச்சு மொக்கை படம் எடுப்பவர்கள் அடுத்த படம் எடுத்தா சூப்பர் ஹிட்டாகுது. இது ஆரம்பம் முதலே அஜித்தை தொடரும் ராசியாக இருக்கிறது.
இவருக்கு கிரீடம் கொடுத்தவர் ஆர்யாவுக்கு மதராஸபட்டிணம் கொடுக்கிறார், இவருக்கு ஜி  ன்னு ஒரு சப்பைய கொடுத்த லிங்குசாமி இன்னைக்கு மோஸ்ட் வாண்டட் டைரக்டர். இவர் அறிமுகப் படுத்துன முருகதாஸ் ஹாலிவுட் ரேஞ்ச்க்கு போயிட்டார், அவரோட ஆஸ்தான ஹீரோவா சூர்யா ஆயிட்டார்.
இவர் விட்ட படங்களில் நடிச்சே ஒருத்தர் தமிழ் சினிமாவுக்கு கமலுக்கு அடுத்த நடிகர் நான் தான்னு மார்தட்டிட்டு இருக்கார் அந்த நிஜ நடிகர்.
இவர் என்னடான்னா நான் ப்ளைட் ஓட்வேன், ரேஸ் கார் ஓட்வேன், ஆனா ஓடற மாதிரி படம் மட்டும் என்னால செலக்ட் பண்ணவே முடியாதுன்னு சொல்லாம சொல்றார். கெளதம் மேனன் இவருக்கு 2 கதை சொல்லி அவரை இழுத்தடிச்சதுல ஐயா ஆள விடு சாமின்னு அவரு மீண்டும் நிஜ நடிகர் பக்கமே போயிட்டார்.
இவர் நான் அவர் இல்லாமலே 50 படம் நடிச்சுட்டேன்னு பேட்டி கொடுக்கிறார், அதுல எத்தனை ஓடுச்சுன்னு கணக்கு கொடுப்பாரான்னு கேட்கிற விஜய் ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாம முக்குறாங்க இவரோட ரசிகர்கள்.
இவர் நல்ல நடிகர்னு தமிழ் சினிமாவுல இருக்க எல்லோருமே சொல்றாங்க. ஆனா நல்ல படம் பண்ண மாட்டேங்கறாரே அப்படின்னு இவரோட ரசிகர்கள் பொழம்புவது இவர் காதுக்கு போகவே மாட்டேங்குது. இவர் நடிச்சு ஹிட்டான படமே வரலாறா இருக்கு. ஆனா இவரோட வரலாறே தோல்வி படங்களாதான் இருக்கு.
கமல் ரஜினி எல்லாம் இவரை போல இருந்தப்போ வருஷத்துக்கு 10 படம் பண்ணாங்க. விஜய், சூர்யா வருஷத்துக்கு 3 படம் பண்றாங்க. இவர் என்னடான்னா என்னை விட யாரும் வாழ்க்கைல தோல்விய பார்த்திருக்க முடியாதுன்னு சொல்லிட்டு  வெற்றிய தேடாம  வேற வேலைய பார்க்க போயிடறார்.
5 தோல்விகளை கொடுத்தாலும் விஜய் ரசிகர்கள் பரபரப்பா தளபதியோட அடுத்த படம் வரும் பாருங்க அப்படின்னு காலரை தூக்குறாங்க. ஆன இவரோ ரசிகர்கள் அடுத்து எப்போ படம் பண்ணுவாருன்னே தெரியாம இவருக்கு புகழ் பாட வேண்டியதா இருக்கு. தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் கூட்டம் வச்சிருக்கவர்னு பேர் இருக்கு. ஆனா அந்த ரசிகர் இவரால எவ்ளோ நொந்து போயிருக்காங்கன்னு இவருக்கு தெரியாமலே போயிட்டு இருக்கு.
இதோ ஆரம்பிச்சுட்டோம்னு சொன்ன மங்காத்தாவோட புகழ் மங்கலாவே போகுது. எப்போ ஷூட்டிங்னு கேட்டா அக்டோபராம்.. அதுலயும் இன்னும் யாரு நடிக்க போறாங்கன்னு தெரியல. சிம்புவாம், ஜீவாவாம், ஜெய்யாம், ப்ரேம்ஜியாம், இவ்ளோ கூட்டதுல நடிச்சா அது அஜித் படமா?? வெங்கட் பிரபு அஜித்தை வச்சு காமெடி பண்றமாதிரியே தோணுது…
அடுத்து மதராஸபட்டினம் விஜய் படம்னு சொன்னாங்க, பார்த்தா விக்ரம வச்சு படம் பண்ண ஆரம்பிச்சுட்டார் விஜய். ஆப்த ரட்சகா பார்த்துட்டு இவருக்கு வாசுகிட்ட ரஜினி சிபாரிசு செய்ய இவரும் படம் பார்த்துட்டு நல்லாருக்குனு பதில் சொல்லிட்டு அடக்கம் ஆயிட்டார். வாசு வேற வழிதெரியாம பிரகாஷ் ராஜ்கிட்ட கேட்டுட்டு இருக்காராம். ஸோ அதும் இல்லாம போயிடும் போல இருக்கு..
இப்படியே போயிட்டு இருந்தா இவர் வெற்றி படம் கொடுக்க மாட்டார் போலிருக்கு… வெற்றி படமெல்லாம் இவர்கிட்ட கதை சொல்லிட்டு, அது  வேற ஒரு நடிகர் நடிச்ச படமா இருக்க போகுது.
தல விழித்தெழுவது எப்போது…??

[red][b]Mande scrap musical pelo site www.mensagenseimagens.com.br[/b][/red]
3 இடியட்ஸில் விஜய், ஷங்கரைத் தவிர வேறு யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இசை ஹாரீஸ் ஜெயராஜ் என்றும் சத்தியராஜ்க்கு 1 கோடி சம்பளம் கொடுத்து புக் செய்யப்பட்டுள்ளார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கிறது.
பரமஹம்சாவிற்கு அடித்த பம்பர் :
இதற்கிடையே ஈரம் படத்தின் சிறந்த ஒளிபதிவாளராக திகழ்ந்த மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடுத்தடுத்த பெரிய இயக்குநர்களின் வாய்ப்பு வந்தக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-வை தொடர்ந்து, தனது அடுத்தப் படமான நடுநிசி நாய்களுக்கும் அவரையே பயன்படுத்தினார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌ரீமேக்குக்கும் இவர்தான் ஒளிப்பதிவு.
இவை தவிர கௌதம் தயா‌ரிக்கும் வெப்பம் படத்துக்கும் மனோ‌ஜ் பரமஹம்சாவே ஒளிப்பதிவு செய்கிறார். இவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மெகா வாய்ப்பு ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக்கிற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
எந்திரன் ரிலீசுக்குப் பிறகே பரபரப்பாக இயங்கவுள்ளது “3 இடியட்ஸ்” டீம்.

ரசிகர்கள் இனி ஒன்னும் பண்ண முடியாது-அஞ்சலி வியூகம்!

அஞ்சலியிடம் எதை வேணும்னாலும் கேட்கலாம். அந்த ஒரு கேள்வியை தவிர. அப்படி கேட்டால் அழாத குறையாக கண்களை கசக்குவார் அவர். அதென்னா பொல்லாத கேள்வி. கல்யாணம் எப்போ என்ற கேள்வியாக இருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்க தேவையில்லை. ஊர்ல இருக்கிற எல்லா நடிகைக்கும் நல்ல நல்ல ஹீரோக்களா கிடைக்கிறாங்க. ஆனா உங்களுக்கு மட்டும் புதுமுகமா மாட்றாங்களே, ஹையய்யோ…ங்கிறதுதான் அந்த கேள்வி.
கண்ணை கசக்கினாலும் பதிலை சரியா சொல்லிட்டுதான் அந்த வேலைய செய்யுது பொண்ணு. நிஜம்தான் சார். ஆனால் எனக்கொரு திருப்தி இதுல இருக்கு. நடிக்க வரும்போது எல்லாரும் புதுமுகம்தான். வந்த பிறகுதான் பெரிசு சிறுசு எல்லாம்.
நான் கற்றது தமிழ் படத்துல நடிக்க வரும்போது ஜீவா பெரிய நடிகர். இந்த புதுமுகத்தோட நான் நடிக்கறதான்னு ஒதுங்கியிருந்தா இன்னைக்கு இந்த அஞ்சலி உங்க முன்னாடி நின்னுருக்க மாட்டா. அவரு செஞ்சதைதான் நான் இப்போ செய்யுறேன். என்னை பொறுத்தவரை கதை நல்லாயிருக்கணும். அது போதும். மற்றபடி புது ஹீரோவா, பெரிய ஹீரோவாங்கிறதெல்லாம் நான் யோசிப்பதே இல்ல என்றார்.
முன்பு மாதிரி அஞ்சலியை பார்த்த வேகத்தில் பக்கத்தில் போய் ஆட்டோகிராப் வாங்கிவிட முடியாது. புதுசா சில இளைஞர்கள் வாட்ட சாட்டமா வர்றாங்க. அத்துமீறி பக்கத்துல வந்தா கொத்தா அள்ளி எறிஞ்சுருவாங்களாம். கொஞ்ச நாளா ரசிகர்கள் தொந்தரவு அதிகமா இருக்கறதாலதான் இப்படி ஒரு ஏற்பாடு என்றார். ஆக இனி அத்துமீறும் ரசிகர்கள் இனி அஞ்சலியை ஒன்னும் பண்ண முடியாது.

Friday, September 17, 2010

இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"

ஹாய்! மீட் பண்ணி நாளாச்சுல்ல"-அழுத்தமாகக் கை குலுக்குகிறார் டைரக்டர் சித்திக்.



...சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்."எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன்.

இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"மேலும் படங்களுக்கு...

"இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"

"முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது?

விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!"


"இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?" "அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை.

ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு.

நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும்.

எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"

"மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..." "அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!"

"நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?" "மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம்.

ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு.

நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது.

அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"

மீண்டும் குட்டையை குழப்பும் மங்காத்தா.......

அஜித் கெளதம் மேனனை கழட்டி விட்டுட்டு  வெங்கட் பிரபுவை வைத்து பூஜை போடப்பட்ட படம் மங்காத்தா, ஆரம்பம் முதலே இது மங்கலாத்தாவாவே இருக்கிறது, 4 ஹீரோன்னு சொன்னார்கள், இல்ல 3 ஹீரோன்னு சொன்னார்கள், ஹீரோயின் அனுஷ்கா சொன்னாங்க, இல்ல நீது சந்திரா சொன்னாங்க, கடைசியா இப்போ வரைக்கும் யாரு ஹீரோயின்னு தெரியல, அதுலயும் காமெடி ஆனந்த விகடன்ல ஹீரோயின் வேணும் வெங்கட் பிரபுவும், நான் தான் ஹீரோயின்னு நீது சந்திராவும் ஒரே புத்தகத்தில் பேட்டி கொடுத்த காமெடி எல்லாம் நடந்தது.
அப்படியே தட்டு தடுமாறி மாறி , சிம்பு கெஸ்ட் ரோல், ஜீவாக்கு ஒரு ரோல், நாகர்ஜூனாவுக்கு  ஒரு மெயின் ரோல்னு சூட்டை ஏத்தி நான் மகான் அல்ல படத்தோட ஒரு டீசரையும் வெளியிட்டு நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடின்னு காலரை தூக்கிவிட்டுக்கிட்டு சுத்தினாங்க மங்காத்தா டீம்.
ஆனா, ஊதுன பலூன்ல ஊசிக்குத்துனா மாதிரி வந்திருக்கு ஒரு செய்தி நாகர்ஜூன் இன்னும் இந்த படத்தை ஒப்புக்கவே இல்லையாம், கதை மட்டும் சொல்லி இருக்காங்க அவரும் கதை நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கார் உடனே இவங்க அவரை படத்துல சேர்த்து பப்ளி சிட்டி சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க, இதை கேள்வி பட்ட நாகர்ஜூன் போனை போட்டு நான் இந்த படத்துக்கு கமிட் ஆகாம எப்படி நீங்க பிரஸ்க்கு செய்தி கொடுக்கலாம்னு காண்டாகி இருக்கார்.
மங்காத்தாவுல நாகர்ஜூன் உள்ளேவா??? வெளியவா?? அது வெங்கட் பிரபுக்குதான் தெரியும்

நம்பிக்கை துரோகம் செய்யும் சிவகுமார வாரிசு



திரையில் மட்டுமே தான் நான் நல்லவன், நான் நல்லவன் என்று சொல்லிக்கொள்ளாமல் கேமராவை பார்க்கும் போதெல்லாம் நடிக்க ஆரம்பிப்பவர் சிவகுமார வாரிசு நடிகர். பல நடிகர் விடும் படத்தில் நடித்து நடித்தே முன்ணனிக்கு வந்தவர் இவர். ஆனால் இவர் போடும் சீன் ரொம்பவே அதிகமாம்.
தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கஷ்டப்பட்டால் ஓடிச்சென்று உதவும் நட்சத்திரங்கள் இருக்கும் அதே திரையுலகில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கே அல்வா கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி அல்வா கொடுப்பதில் முன்னணி இடத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர் சூர்ய நடிகர். நேருக்கு நேரான படத்தில் அறிமுகமானாலும் அவரை முதலில் நாயகன் ஆக்கியவர் சிவமான சக்தி தயாரிப்பாளர்தான்.
இளம் இயக்குனர்களின் கலங்கரைவிளக்காக திகழ்ந்து வந்த அந்த தயாரிப்பாளர் காதல்கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே என நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். பின்‌னொரு காலகட்டத்தில் கஷ்டமான சூழ்நிலைகளை தாண்டி, இப்போது புதுப்படம் ஒன்றிற்காக சூர்ய நடிகரிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதோ… அதோ.. என்று ஜகா வாங்கிய அந்த நடிகர் கடைசியில் கால்ஷீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டாராம். தான் அறிமுகப்படுத்திய நடிகர் தனக்கு உதவி செய்வார் என எதிர்பார்த்த தயாரிப்பாளர் விரக்தியில் இருக்கிறார். சமீபத்தில் இப்படி இழுக்கடித்து டைரக்டர் பாலாவையும் கழட்டிவிட்டவர் இவர்.
அதேநேரம் விஜய நடிகர் இந்த விஷயத்தில் ரொம்பவே நல்லவர் என்று போற்றுகிறது கோடம்பாக்கம். காதலுக்கு மரியாதை கொடுத்த படத்தை தயாரித்த சங்கிலி, கஷ்டமான காலகட்டத்தில் விஜய நடிகரிடம் கால்ஷீட் கேட்க, அவருக்கு உதவும் விதமாக கால்ஷீட் கொடுத்து படத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்துக் கொடுத்தார்.
அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு அல்வா கொடுக்கும் நடிகர்களை குறிப்பிட்டு ஒரு சினிமா விழாவில் கடுப்பாகி சங்கிலி தயாரிப்பாளர் பேசிய பேச்சு இந்த செய்திக்கு பொருத்தமாக இருக்கும் : “ஒரு பட விழா நடைபெறும்போது, அந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வதில்லை. கேட்டால், டெல்லியில் இருக்கிறேன்…மும்பையில் இருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்கள். ஒரு படத்தை தயாரித்து, அதை திரைக்கு கொண்டுவருவதற்குள் தயாரிப்பாளர் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உதவி செய்யவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட படவிழாக்களில் நடிகர்-நடிகைகள் கலந்துகொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றிபெற்றால், அந்த வெற்றியில் படத்தில் பணிபுரிந்த அத்தனை பேரும் பங்கு போடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால், அந்த பாதிப்பை தயாரிப்பாளர் மட்டுமே சுமக்கிறார். வெற்றியை பங்குபோடுகிறவர்கள், தோல்வியையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும், என்று கூறியிருந்தார் அந்த தயாரிப்பாளர்.

கா‌வலன்-சுடச்சுட கலக்கள் படங்கள்

வி‌ஜய்‌, அசின் ஜோடியாக நடி‌த்‌து வரும்‌ படம்‌ கா‌வலன்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ தலை‌ப்‌பு‌ அறி‌முக வி‌ழா‌‌ நேற்‌று செ‌ன்‌னை‌யி‌ல்‌ உள்‌ள நடந்‌தது. இந்த படத்தில் வடிவேலு, ராஜ்கிரன், ரோஜா அகிறோரும் நடிக்கின்றனர்.
கா‌வலன்-சுடச்சுட கலக்கள் படங்கள் :