ஒரு பக்கம் வரிசையாக தளபதி படவரிசைகளை அடுக்கிட்டு வரார், காவலன், வேலாயுதம், பகலவன், 3 இடியட்ஸ், என்று பட்டாசாய் பொறிய, அஜித் போன வருசம் அசல்னு ஒரு மாடல் ரேம்ப் வாக் போற மாதிரி ஒரு படத்தை கொடுத்துட்டு அடுத்த படத்துக்கு அதோ இதோன்னு இழுத்துட்டு இருக்கார்.ஆரம்பம் முதல்லே நல்ல படங்களுக்கும், நல்ல டைரக்டர்களுக்கும் இவருக்கும் ஆகறதே இல்ல, நல்ல படம் எடுக்கிறவங்க இவரை வச்சு படம் எடுத்தா அது பப்படம் ஆயிடுது. இவரை வச்சு மொக்கை படம் எடுப்பவர்கள் அடுத்த படம் எடுத்தா சூப்பர் ஹிட்டாகுது. இது ஆரம்பம் முதலே அஜித்தை தொடரும் ராசியாக இருக்கிறது.
இவருக்கு கிரீடம் கொடுத்தவர் ஆர்யாவுக்கு மதராஸபட்டிணம் கொடுக்கிறார், இவருக்கு ஜி ன்னு ஒரு சப்பைய கொடுத்த லிங்குசாமி இன்னைக்கு மோஸ்ட் வாண்டட் டைரக்டர். இவர் அறிமுகப் படுத்துன முருகதாஸ் ஹாலிவுட் ரேஞ்ச்க்கு போயிட்டார், அவரோட ஆஸ்தான ஹீரோவா சூர்யா ஆயிட்டார்.இவர் விட்ட படங்களில் நடிச்சே ஒருத்தர் தமிழ் சினிமாவுக்கு கமலுக்கு அடுத்த நடிகர் நான் தான்னு மார்தட்டிட்டு இருக்கார் அந்த நிஜ நடிகர்.
இவர் என்னடான்னா நான் ப்ளைட் ஓட்வேன், ரேஸ் கார் ஓட்வேன், ஆனா ஓடற மாதிரி படம் மட்டும் என்னால செலக்ட் பண்ணவே முடியாதுன்னு சொல்லாம சொல்றார். கெளதம் மேனன் இவருக்கு 2 கதை சொல்லி அவரை இழுத்தடிச்சதுல ஐயா ஆள விடு சாமின்னு அவரு மீண்டும் நிஜ நடிகர் பக்கமே போயிட்டார்.இவர் நான் அவர் இல்லாமலே 50 படம் நடிச்சுட்டேன்னு பேட்டி கொடுக்கிறார், அதுல எத்தனை ஓடுச்சுன்னு கணக்கு கொடுப்பாரான்னு கேட்கிற விஜய் ரசிகர்களுக்கு பதில் சொல்ல முடியாம முக்குறாங்க இவரோட ரசிகர்கள்.
இவர் நல்ல நடிகர்னு தமிழ் சினிமாவுல இருக்க எல்லோருமே சொல்றாங்க. ஆனா நல்ல படம் பண்ண மாட்டேங்கறாரே அப்படின்னு இவரோட ரசிகர்கள் பொழம்புவது இவர் காதுக்கு போகவே மாட்டேங்குது. இவர் நடிச்சு ஹிட்டான படமே வரலாறா இருக்கு. ஆனா இவரோட வரலாறே தோல்வி படங்களாதான் இருக்கு.கமல் ரஜினி எல்லாம் இவரை போல இருந்தப்போ வருஷத்துக்கு 10 படம் பண்ணாங்க. விஜய், சூர்யா வருஷத்துக்கு 3 படம் பண்றாங்க. இவர் என்னடான்னா என்னை விட யாரும் வாழ்க்கைல தோல்விய பார்த்திருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வெற்றிய தேடாம வேற வேலைய பார்க்க போயிடறார்.
5 தோல்விகளை கொடுத்தாலும் விஜய் ரசிகர்கள் பரபரப்பா தளபதியோட அடுத்த படம் வரும் பாருங்க அப்படின்னு காலரை தூக்குறாங்க. ஆன இவரோ ரசிகர்கள் அடுத்து எப்போ படம் பண்ணுவாருன்னே தெரியாம இவருக்கு புகழ் பாட வேண்டியதா இருக்கு. தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர் கூட்டம் வச்சிருக்கவர்னு பேர் இருக்கு. ஆனா அந்த ரசிகர் இவரால எவ்ளோ நொந்து போயிருக்காங்கன்னு இவருக்கு தெரியாமலே போயிட்டு இருக்கு.இதோ ஆரம்பிச்சுட்டோம்னு சொன்ன மங்காத்தாவோட புகழ் மங்கலாவே போகுது. எப்போ ஷூட்டிங்னு கேட்டா அக்டோபராம்.. அதுலயும் இன்னும் யாரு நடிக்க போறாங்கன்னு தெரியல. சிம்புவாம், ஜீவாவாம், ஜெய்யாம், ப்ரேம்ஜியாம், இவ்ளோ கூட்டதுல நடிச்சா அது அஜித் படமா?? வெங்கட் பிரபு அஜித்தை வச்சு காமெடி பண்றமாதிரியே தோணுது…
அடுத்து மதராஸபட்டினம் விஜய் படம்னு சொன்னாங்க, பார்த்தா விக்ரம வச்சு படம் பண்ண ஆரம்பிச்சுட்டார் விஜய். ஆப்த ரட்சகா பார்த்துட்டு இவருக்கு வாசுகிட்ட ரஜினி சிபாரிசு செய்ய இவரும் படம் பார்த்துட்டு நல்லாருக்குனு பதில் சொல்லிட்டு அடக்கம் ஆயிட்டார். வாசு வேற வழிதெரியாம பிரகாஷ் ராஜ்கிட்ட கேட்டுட்டு இருக்காராம். ஸோ அதும் இல்லாம போயிடும் போல இருக்கு..இப்படியே போயிட்டு இருந்தா இவர் வெற்றி படம் கொடுக்க மாட்டார் போலிருக்கு… வெற்றி படமெல்லாம் இவர்கிட்ட கதை சொல்லிட்டு, அது வேற ஒரு நடிகர் நடிச்ச படமா இருக்க போகுது.
தல விழித்தெழுவது எப்போது…??
dai nagamani kai la kedacha mavane mudunchada
ReplyDelete