களவாணி வெற்றிப் படத்தைத் தந்த இயக்குவர் சற்குணம் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை வெற்றி பாதையாக மாற்றிய இயக்குநர் சற்குணம், தற்போது இளைய தளபதியுடன் இணைய உள்ளார்.விஜய் கையில் ஷங்கர், சீமான், ராஜா, விக்ரம் என மெகா இயக்குநர்களின் படம் இருக்க, சற்குணத்திற்கு தனது கால்ஷீட்டை ஒதுக்கிருக்கிறார். சற்குணம் படத்தில் விஜய் போலீஸாக நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. போக்கிரி படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மட்டும் விஜய் போலீஸ் உடை அணிந்து வலம் வந்தார்.
ஆனால் இந்த முறை அப்படி இல்லையாம். விஜய் படம் முழுக்க போலீசாக வருகிறாராம். விஜய் ஓகே சொன்னதும், முழு உத்வேகத்துடன் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறாராம் சற்குணம்.அசத்துங்க சற்குணம்.
No comments:
Post a Comment