Wednesday, September 1, 2010

காவலன் 40 – மகிழ்ச்சியில் ஷக்தி!

இளைய தளபதி விஜயின் காவலன் அதிவிரைவில் ரிலீஸாகவிருக்கிறது ( தீபாவளி ஸ்பெஷல் ). அசின் கொடுத்த தேதிகளையும் வைத்துக் கொண்டு மளமளவென படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சித்திக். இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தை சினிமா பேரடைஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கு கைமாற்றியுள்ளார்.
ஆம்.  “காவலன்” படத்தின் உரிமையை நாற்பது கோடியே ஐம்பது லட்சத்திற்கு வாங்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம். விஜயை வைத்து படம் தயாரிக்க ஆசைப்பட்ட தயாரிப்பாளர்களில் ஷக்தி சிதம்பரமும் ஒருவர். இந்த முறை “காவலன்” படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார் மகிழ்ச்சியாக.
இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளி.

No comments:

Post a Comment