Monday, September 27, 2010

ஆஸ்கார் தேர்வு-கேவலப்பட்ட தமிழ் சினிமா

நான் ஆஸ்கார் வாங்கி விடுவேன், என்னை உலக சினிமா அங்கீகரிக்க வில்லை, விருது கமிட்டி சரி இல்லை, வட இந்தியர்கள் நம்மை புரக்கணிக்கிறார்கள், என்று வாய் சவடால் மட்டுமே விடும் தமிழ் சினிமாவுக்கு  ஒரு கேவலமான வருடமாக இந்த வருடமும் இருந்திருக்கிறது.
ஆஸ்காருக்கு பரிந்துரைக்க தமிழ் சினிமா தேர்வுக்குழு, மத்திய குழுவுக்கு பரிந்துரைத்த படங்களைப்பார்த்தால் தமிழ் சினிமா பிரகஸ்பதிகளைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.
வருடம் ஏறக்குறைய 130 படங்களைத் திரைக்குக் கொண்டுவருகிறது தமிழ் சினிமா. ஆஸ்காருக்கு அனுப்ப இதிலிருந்து படங்களை 5 படங்கள் தேர்ந்தெடுக்க முடிய வில்லை. திரையில் சமூக சிந்தனை இல்லை, தீர்க்கமான காட்சிகள் இல்லை, தெளிவான கதை இல்லை, புதிய காட்சி அமைப்பு இல்லை. இப்படி இல்லை… இல்லை… இல்லைகளுக்கு மத்தியில் தமிழ் சினிமா வளர்கிறது என்ற வசனம் பேசுபவர்களுக்கு பஞ்சமே இல்லை.
இந்த வருடம் ஆஸ்காருக்கு, நம்ம தமிழ் சினிமாவினர் பரிந்துரைத்த தமிழ் படங்களின் பெயர்களை சிரிக்காமல் படிக்க  கேட்டுக்கொள்கிறேன்.
1) ராவணன்
2) மதராஸப்பட்டிணம்
3) விண்ணைத்தாண்டி வருவாயா
4) அங்காடித்தெரு
5) சிங்கம்
என்ன கொடுமை சார்னு நீங்க கேட்கிறது எங்க காதுலயும் விழுது… இந்த படங்களை கொஞ்சம் அலசலாம்…
ராவணன் :
இந்த படம் வந்து தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதாக கிழிக்கப்பட்ட படம்.  தெளிவில்லாத கதையும், மகா மட்டமான வசனமும் இந்த படத்தின் தரத்திற்கு சான்று. இந்த படம் ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும் இந்திய சினிமாவின் அடுத்தகட்டம்னு சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால்… இதை ஆஸ்காருக்கு போய் பரிந்துரைக்கிறோம்னு சொன்னால் ஆஸ்கார் விருது கமிட்டி இந்தியாவை பார்த்து சிரிக்காது???. அதிலும் கார்த்திக்கின் கதாபாத்திரம் படத்தின் எதார்த்தம் என்கிற விஷயத்தை கொன்ற விசயம் அல்லவா அது??.
இந்த படம் பார்த்த நம்ம ஊர் தெருக்கோடி ரசிகனுக்கு கூட 4 கேள்வி… ஏன் இதை இந்த இயக்குனர் இப்படி பண்ணி இருக்கார்னு கேட்பாங்க, அப்படி இருக்கும் போது இந்த படத்தை எப்படி ஆஸ்காருக்கு பரிந்துரைக்க சொல்கிறீர்கள்??.
மனிரத்னம் பெரிய டைரக்டர்  என்பதாலா?? பெரிய  இயக்குனர் நல்ல படம் மட்டும்தான் எடுப்பாரா?? அவரும் ராவணன் எடுப்பார் அப்படின்னு உலகத்துக்கு சொல்லிட்டார்.
மதராஸபட்டிணம் :
நல்ல பொழுதுபோக்கு படமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட படம்.  ஆனால்… இந்த படம் பார்த்த அத்தனை பேருக்குமே டைட்டானிக் ஞாபகம் வந்து போயிருக்கும். இது தமிழ் சினிமாவின் டைட்டானிக் என்றுதான் இந்த படத்தின் இயக்குனரே விளம்பரம் செய்திருக்கிறார். ஆனால் ஒரிஜினல் டைட்டானிக் பார்த்தவங்களுக்கு நீங்க பொம்மை டைட்டானிக் காட்டணும் நினைச்சிருக்கீங்களே??
விண்ணைத்தாண்டி வருவாயா
போன வருடம் தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமா காதலர்களுக்கு நல்ல தீனி போட்ட படம். இதே அளவு மொக்கை என்று விமர்சனம் வாங்கிய படம். இந்த படத்தை எப்படி விருதுக்கு பரிந்துரைத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி?? விருதுக்கு உரிய தன்மைகள் இந்த படத்துல பூஜியம்.
விருதுக்கு செல்லும்  படம் எப்படி இருக்கணும்னு ஒரு அடிப்படை அறிவு இல்லாதவன் கூட இந்தப்படத்தைத் தேர்வு செய்ய மாட்டான். ஒரு வேலை சிம்பு பேசும் அந்த 4 எழுத்து கெட்ட வார்த்தை வெள்ளைகாரர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று நினைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் தான் வருகிறது.
அங்காடித்தெரு
நம்ம ஊர் விருதுகளுக்கு சற்று பொருத்தமான படம் என்றால் இது மட்டுமே. அதுவும் நம்ம ஊர் விருதுகளுக்கு மட்டுமே. உலகளவிய விருதுகளுக்கு பொருத்தமானதாகத் தெரிய வில்லை. காரணம் படத்தின் கதை சொல்லும் பாங்கு, ஒரே கண்ணோட்டம் இந்த படம் முழுவதும் விரவி கிடக்கும். யாதார்த்தம் என்ற பெயரில் யதார்த்தமே இல்லாமல் இருக்கிறது இந்த படம்.
யதார்த்தம் இப்படிப்பட்டதுதான் என்று சொன்ன டைரக்டர் படத்தில் டூயட் வைத்தது எந்த ஊர் யதார்த்தம் என்று தெரியவில்லை. ஆனாலும் உழைக்கும் மக்களின் கஷ்டங்களும் துன்பங்களும் சற்று மிகைப்படுத்தியேனும் சொல்லப்பட்டதற்கு இயக்குனரை கண்டீப்பாக பாராட்டலாம்.
(அ) சிங்கம்
தமிழ் சினிமா படைப்பாளிகளை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. ஒரு மசாலா குப்பையை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க சொன்ன நம்ம சினிமாதுறையை என்ன சொல்வது ? சிங்கம் சூர்யாவின் வெற்றிபடம்தான்; ஹரியின் மசாலா வரிசையில் இதுவும் ஒன்று. இந்த படத்துக்கு ஆஸ்கார் என்றால்?? கில்லிக்கு 10 ஆஸ்கார், தூள் க்கு 10 ஆஸ்கார், தில் க்கு ஒரு 15 ஆஸ்கார், போக்கிரிக்கு ஒரு 10 இவோலவு ஏன் அசல்க்கு கூட ஒரு 5 ஆஸ்கார் கொடுக்கலாம் சிங்கம் படத்துக்கு இந்த படங்கள் 75 மடங்கு சிறந்தது
என்னயா உங்க ரசனை, எதை எதை எங்க வைக்கணும்னு தெரிய வேண்டாமா ?? இதை எல்லாம் விருதுக்கு பரிந்துரைக்கிறதா சொல்லி தமிழ் சினிமாவில் நல்ல படம் எடுக்க ஆளே இல்லன்னு இந்தியா முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டி இருக்கீங்க??. ஆனது ஆயிடுச்சு இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணா எந்திரன் வந்துடும் அதையும் சேர்த்தே ஆஸ்காருக்கு அனுப்புங்க…
இனிமே சிங்கம் சன்டீவில உலகதொலைக்காட்சியில் முதன் முறையாக வெளி வரும்போது, விளம்பரத்துல ஆஸ்கார் விருது பெற்ற அப்படின்னே சொன்னாலும் சொல்வாங்க… தமிழ் சினிமாவில் தரமான சினிமா குறைந்ததற்கு இதைவிட ஒரு பெரிய சான்று தேவை இல்லை.
தரமான படம் எடுத்து, இது படம் என்று மார்தட்டி ஆஸ்கார் சென்றிருக்கும் பீப்லி லைவ் படம் வெற்றி பெற வாழ்த்துவோம்…
அமீர்கானுக்கு ஒரு சல்யூட்…

No comments:

Post a Comment