அஜித் கெளதம் மேனனை கழட்டி விட்டுட்டு வெங்கட் பிரபுவை வைத்து பூஜை போடப்பட்ட படம் மங்காத்தா, ஆரம்பம் முதலே இது மங்கலாத்தாவாவே இருக்கிறது, 4 ஹீரோன்னு சொன்னார்கள், இல்ல 3 ஹீரோன்னு சொன்னார்கள், ஹீரோயின் அனுஷ்கா சொன்னாங்க, இல்ல நீது சந்திரா சொன்னாங்க, கடைசியா இப்போ வரைக்கும் யாரு ஹீரோயின்னு தெரியல, அதுலயும் காமெடி ஆனந்த விகடன்ல ஹீரோயின் வேணும் வெங்கட் பிரபுவும், நான் தான் ஹீரோயின்னு நீது சந்திராவும் ஒரே புத்தகத்தில் பேட்டி கொடுத்த காமெடி எல்லாம் நடந்தது.
அப்படியே தட்டு தடுமாறி மாறி , சிம்பு கெஸ்ட் ரோல், ஜீவாக்கு ஒரு ரோல், நாகர்ஜூனாவுக்கு ஒரு மெயின் ரோல்னு சூட்டை ஏத்தி நான் மகான் அல்ல படத்தோட ஒரு டீசரையும் வெளியிட்டு நாங்களும் ரவுடி நாங்களும் ரவுடின்னு காலரை தூக்கிவிட்டுக்கிட்டு சுத்தினாங்க மங்காத்தா டீம்.
ஆனா, ஊதுன பலூன்ல ஊசிக்குத்துனா மாதிரி வந்திருக்கு ஒரு செய்தி நாகர்ஜூன் இன்னும் இந்த படத்தை ஒப்புக்கவே இல்லையாம், கதை மட்டும் சொல்லி இருக்காங்க அவரும் கதை நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கார் உடனே இவங்க அவரை படத்துல சேர்த்து பப்ளி சிட்டி சேர்க்க ஆரம்பிச்சுட்டாங்க, இதை கேள்வி பட்ட நாகர்ஜூன் போனை போட்டு நான் இந்த படத்துக்கு கமிட் ஆகாம எப்படி நீங்க பிரஸ்க்கு செய்தி கொடுக்கலாம்னு காண்டாகி இருக்கார்.
மங்காத்தாவுல நாகர்ஜூன் உள்ளேவா??? வெளியவா?? அது வெங்கட் பிரபுக்குதான் தெரியும்

No comments:
Post a Comment