Thursday, September 2, 2010

ராஸ்கல்- பொங்கியெழுந்த ரசிகர்கள்

விஜய் நடிக்கவிருக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குவதாகவும், தலைப்பை மாற்றுங்கள் என இப்போதே கோரிக்கை வைக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜெமினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஆர்யா, ஜீவா இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா நாயகியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள் இந்தப் படம் குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்துக்கு ராஸ்கல் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி விஜய் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம். விஷயம் கேள்விப்பட்டு, விஜய் ரசிகர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என்ன தலைப்புய்யா இது… தயவு செய்து படத்தின் பெயரை மாத்துங்க. ஏற்கெனவே அந்தப் பெயரைச் சொல்லித்தான் வீட்டிலும் வெளியிலும் திட்டுகிறார்கள். தயவுசெய்து படத்தின் தலைப்பை மாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனராம்.
அப்ப கூடிய விரைவில் தலைப்பு மாறும் என நம்பலாம்…

No comments:

Post a Comment