Wednesday, September 22, 2010

3 இடியட்ஸில் விஜய், ஷங்கரைத் தவிர வேறு யாரும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இசை ஹாரீஸ் ஜெயராஜ் என்றும் சத்தியராஜ்க்கு 1 கோடி சம்பளம் கொடுத்து புக் செய்யப்பட்டுள்ளார் என்றும் சில செய்திகள் தெரிவிக்கிறது.
பரமஹம்சாவிற்கு அடித்த பம்பர் :
இதற்கிடையே ஈரம் படத்தின் சிறந்த ஒளிபதிவாளராக திகழ்ந்த மனோ‌ஜ் பரமஹம்சாவிற்கு அடுத்தடுத்த பெரிய இயக்குநர்களின் வாய்ப்பு வந்தக் கொண்டிருக்கிறது. கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா-வை தொடர்ந்து, தனது அடுத்தப் படமான நடுநிசி நாய்களுக்கும் அவரையே பயன்படுத்தினார் கௌதம். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ‌‌ரீமேக்குக்கும் இவர்தான் ஒளிப்பதிவு.
இவை தவிர கௌதம் தயா‌ரிக்கும் வெப்பம் படத்துக்கும் மனோ‌ஜ் பரமஹம்சாவே ஒளிப்பதிவு செய்கிறார். இவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு மெகா வாய்ப்பு ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ‌‌ரீமேக்கிற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
எந்திரன் ரிலீசுக்குப் பிறகே பரபரப்பாக இயங்கவுள்ளது “3 இடியட்ஸ்” டீம்.

2 comments:

  1. சங்கர்:என்னுடைய சினிமா சரித்திரிலேயே
    ப்ளாப் என்பதே கிடையாது......
    விஜய்:நீ இன்னும் என்ன வச்சு படம்
    எடுக்கலைல இதுவும் பேசுவ
    இதுக்கு மேலையும் பேசுவ.........

    ReplyDelete
  2. 50 வது படம் தான்னு சொல்லிட்டு இருந்தாங்க இப்ப “3 இடியட்ஸ்”னு சொல்லுறாங்க...... இதுவும் ப்ளாப் னா அதுத்த படம் ல பாப்போம் னு சொல்லுவாங்க .......இவங்களுக்கு ஒரு முடிவே இல்ல யா..................ஹி

    ReplyDelete