Wednesday, September 22, 2010

விஜய்யின் புதிய புராஜெக்ட்-விரைவில் அதிகாரப்பூர்வமாக!

விஜய்யின் காவலன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. வேலாயுதம் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சிறையிலிருந்து சீமான் வெளியே வந்தால் பகலவன் வேலைகளும் தொடங்கிவிடும்.
இதன் நடுவில் களவாணி சற்குணம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இந்நிலையில் விஜய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கோடம்பாக்க பட்சி தெ‌ரிவிக்கிறது.
விஜய்யை வைத்து கில்லி படத்தை தயா‌ரித்த ஸ்ரீசூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படம் தயா‌ரிக்கப்போவதும், யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்தான் இந்தப் படத்தை இயக்குகிறவர் என்பதையும் உங்கள் நறுமுகையில் ஏற்கனவே கூறியிருந்தோம்.
தற்போது படத்தின் கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டபடியால் படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துவிட்டாராம் தளபதி.
மெகா பட்ஜெட் படமான இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. அடுத்த வாரம் எனது புதிய புராஜெக்ட் குறித்து அறிவிக்க இருக்கிறேன் என விக்ரம் கே.குமார் தெ‌ரிவித்துள்ளார்.
யாவரும் நலம் போலவே இதுவும் வித்தியாசமான சப்ஜெக்ட் என்பது கூடுதல் செய்தி.

1 comment:

  1. விஜய்யும் டப்பிங் படமா பார்த்து தான் நடிக்குறாரு சோ சாரி.........காமெடி பண்ணுறாரு...அப்பிடி இருந்தும் அது ஓட மாட்டிங்கிது.....
    அவரா பார்த்து படம் நடிக்கலைன பரவல்ல.....அடுத்த படம் ஓடும் அடுத்த படம் ஓடும் னே காலத்த ஓடுறாரு.... படம் ஓடுதோ இல்லையோ படம் பாக்குறவன் ஓடுறான்............. என்ன டா னு பார்த்தாரு படம் ஓட மாட்டிங்கிது னு அரசியலுக்கு வர பார்த்தாரு அட அது கூட அவர் படம் மாதிரியே ப்ளாப் ஆயிட்டுச்சு..அப்பப்பா இது எல்லாம் இந்த விஜய் யால மட்டும் தான் முடியும்......பேப்பர் ல இடம் இருந்த S.A.சந்திர சேகர் ஓட பேட்டிய போடுறாங்க.பையன் தப்பு செஞ்ச அப்பா வாவது திருத்தணும் அவரும் விஜய் கூட சேர்ந்துட்டு என் மகனும் அரசியல்லுல குதிக்க போற குதிக்க போறனு பேட்டி கொட்டுக்குறாரு..... மக்களா பார்த்து துரதற வரைக்கும் அவர் படம் நடிக்கத்தான் செய்வர் நீங்களும் வெக்கமில்லாம அட பார்த்து போட்டு இங்க வந்து படம் சூப்பர் னு சொல்ல தான் செய்விங்க... என்ன பண்ணுறது இது எல்லாம் தமிழ் மக்களோட தலைஎழுத்து.............................................நா சத்தியமா விஜய் யா ஒட்டல............ஹி....................
    --
    ~~King~~

    ReplyDelete